Sunday, May 29, 2005

பல்லவியும் சரணமும் NO.25 - வெள்ளி விழா SPECIAL பதிவு

25 வாரங்கள் (நடுவில் ஓரிரு வாரங்கள் விட்டுப் போயிருக்கலாம்!) இப்போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டி, நல்ல பாடல்களைத் தேடி எடுப்பதில் என் காவு தீர்ந்து விட்டது :))

அதனால், 25-வதுடன், பல்லவியும் சரணமும் விளையாட்டை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்திருக்கிறேன். இது வரை வந்த மொத்த 'பல்லவியும் சரணமும்' பதிவுகளில் கேட்கப்பட்ட சரணங்களில், உங்களால் விடை கூற முடியாதாவை என்று பார்த்தால், பத்து அல்லது பதினொன்று மட்டுமே தேறும் :))

உங்களது பேரார்வமும், பழைய பாடல்களின் மீதான விருப்பமும் தான், என்னை இப்போட்டியை தொடர்ந்து நடத்த வைத்தது. "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!

24 பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 5 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. கலங்குதே கண்கள், நான் போன ஜென்மம் செய்த பாவம் ...

2. மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை...

3. இனி பிரிவதில்லை என்னை விடுவதில்லை ...

4. முள் வேலியா, முல்லைப்பூவா சொல்லு...

5. பெண் பெயரை உச்சரித்தே பேசும் ...

6. தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் ...

7. தோள சுத்த காயமாச்சு ...

8. வளையோசை தான் நல்ல மணிமந்திரம் ...

9. இளமைக்கு பொருள் சொல்ல வரவா ...

10. உன் விழி ஓடையில் நான் கலந்தேன் ...

11. உனை நான் கொஞ்சத் தான் மடி மேல் ...

12. என்ன இன்பம் அம்மா உன் இளமை...

13. உள்மூச்சு வாங்கினேனே, முள் மீது தூங்கினேனே ...

14. என் உடல் உனக்கிங்கு சமர்ப்பணம் ...

15. தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம் ...

16. தை மாசம், மல்லிகைப்பூ மணம் வீசும் ...

17. பாட்டைக் கேட்டு கிறங்கிப் போயி நாரத் தானே முடிஞ்சேன் ...

18. என் வானிலே ஒரு தேவமின்னல் வந்தது ...

19. உன் முகம் பார்க்கிறேன், அதில் என் முகம் ....

20. நீங்காத ரீங்காரம் நான் தானே, நெஞ்சோடு ....

21. வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் ...

22. கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ ...

23. கூண்டை விட்டுக் கிளி வந்தது ....

24. நாணத்தில் நீ இருப்பாய் மோனத்தில் நான் இருப்பேன் ...

25. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, May 27, 2005

WANTED --- கருத்துச் சுதந்திரம்

ஜனநாயக நாட்டிலும் கருத்துச் சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், இவ்விடயத்தில் பொதுவாக நம் சமூகத்தில் வளர்ச்சி இல்லை என்பது நிதர்சனம். சகிப்புத்தன்மை, மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்வதில் நேர்மை, ஒரு சாராரின் நம்பிக்கைக்கு புறம்பானவற்றையும் அனுமதிக்கும் பெருந்தன்மை போன்ற பண்புகளை காண்பது அரிதாகி வருகிறது.

தமக்கு பிடிக்காதவற்றை எதிர்த்து வன்முறையிலும் அராஜகத்திலும் ஈடுபடுவதென்பது நடைமுறையில் உள்ளது. அரசியல் ஆதாயத்துக்காகவும் ஊடக ஒளியில் இருப்பதற்காகவும் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவரின் சாகசங்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் சொல்லி மாளாது.

சமீபத்தில் திரைக்கு வந்த "ஜோ போலே ஸோ நிஹால்" என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு, சீக்கிய மதத்திற்கும், அதன் கோட்பாடுகளுக்கும் எதிரானது என்று கூறி, SGPC (Shironmani Gurdwara Prabandh Committee) பயங்கர எதிர்ப்பைத் தெரிவித்தது. அப்படத்தை (உலகெங்கும்!) திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூக்குரலிட்டது.

இதில் கொடுமை என்னவென்றால், தணிக்கைக் குழு ஒரு முறைக்கு இரு முறை இப்படத்தை ஆய்வு செய்து திரையிட உகந்தது என்று கூறிய பின் இத்தனை ஆர்ப்பாட்டமும் !!! மேலும், சாமானிய சீக்கியர்களிடமிருந்து, SGPC-க்கோ, இன்னபிற சீக்கிய அடிப்படைவாதிகளுக்கோ, பெரும் ஆதரவு ஏதும் கிட்டவில்லை.

இப்படம் திரையிடப்பட்டவுடன், லூதியானா, ஜலந்தர், அமிர்தசரசு ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக தில்லியில் படம் திரையிடப்பட்ட இரு அரங்குகளில் குண்டு வெடித்தது. SGPC செய்த கலாட்டாவை சாதகமாக எடுத்துக் கொண்டு சில விஷமிகள் செய்த காரியம் இது என்று கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், SGPC நீதிமன்றம் சென்று படத்தைத் திரையிட தடை வாங்குவதை விட, மிரட்டி உருட்டி பணிய வைப்பதே சிறந்த வழி என்று நம்பியது ! அது போலவே நடந்தும் விட்டதும் !!!

இம்மாதிரி போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கு முன்னும் இது போல் (சகிப்புத்தன்மை துளியும் இல்லாமல்) எதிர்ப்புகள், வன்முறையின் துணையோடு எழுந்துள்ளன. அல்லது, பதவியில் இருப்பவர்கள் கருத்து சுதந்திரத்தை நசுக்கத் தலைப்படுகிறார்கள்.

1. மகாராஷ்டிர மாநிலத்தில், சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்தியதாகக் கூறி, ஒரு புராதன நூலகமே (அருங்காட்சியகமா?) தீக்கிரையாக்கப்பட்டு, பல விலை மதிப்பற்ற பொருட்கள் அழிந்து போயின.

2. ஓரினச் சேர்க்கை குறித்துப் பேசுவதாகக் கூறி, "·பயர்" திரைப்படத்திற்கு சிவசேனா காட்டிய அராஜக எதிர்ப்பு காரணமாக, அத்திரைப்படம் பெரும்பிரச்சினைக்கு உள்ளானது.

3. "SATANIC VERSES" புத்தகத்துக்கு, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து கிளம்பிய பயங்கர எதிர்ப்பால், இந்திய அரசாங்கம் அப்புத்தகத்திற்கு தடை விதித்தது.

4. நமது "தமிழ் பாதுகாவலர்கள்" திரைப்படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைக்க வேண்டும் என்று கூறி, அதன் தொடர்ச்சியாக பல வேண்டாத நிகழ்வுகளும், கூத்துக்களும் நடந்தேறின.

5. சினிமா மற்றும் தொலைக்காட்சியில் மது அருந்துவதை / சிகரெட் பிடிப்பதை காட்டுவதை தடை செய்யும் அரசாணை இயற்றப் போவதாக அமைச்சர் அன்புமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இது தேவையில்லாதது. இதனால் பயனொன்றும் இல்லை. இது எப்படி இருக்கிறதென்றால், குற்றாலத்தில் மழை பெய்தால், கூடுவாஞ்சேரியில் தண்ணீர் கஷ்டம் தீர்ந்து விடும் என்பது போலத் தான். "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று பட்டுக்கோட்டையார் பாடியது தான் நினைவுக்கு வருகிறது !!!

அடுத்து, நம் மக்களிடம் காணப்படும் மற்றொரு (தனித்தன்மையான!) இயல்பு, இறந்து போன மற்றும் வாழ்கின்ற அரசியல் தலைவர்களை கடவுளர்களாக்கி விடுவது. ஒவ்வொரு தலைவருக்கும் நிறைய பக்தகோடிகள் இருக்கிறார்கள். இத்தலைவர்கள் (பெயர் வேண்டாம், சச்சரவு தான் மிஞ்சும்!) பொதுவாக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவே கருதப்படுகிறார்கள் ! ஆனால், அமெரிக்காவில், சக்தி வாய்ந்தவராக கருதப்படும் ஜார்ஜ் புஷ்ஷையே மோசமாக நையாண்டி செய்து திரைப்படமும், பாடலும் கார்ட்டூனும் வந்த வண்ணம் உள்ளன. "ஜனநாயக" இந்தியாவில் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

Sunday, May 22, 2005

இப்படியும் ஓர் Extraordinary இளைஞர் !!!

நமது தெருக்களில் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், அழுக்கான கிழிந்த உடையில் துர்நாற்றத்துடன் திரிவதை பார்த்திருப்பீர்கள். பொதுவாக, மக்கள் அவர்களை தவிர்ப்பதையும் காண முடியும். அத்தகையோருக்கு அடிப்படைத் தேவையான உணவை, 24 வயது நிரம்பிய கிருஷ்ணன் என்ற மதுரைக்காரர் கடந்த 3 வருடங்களாக வழங்கி வருகிறார்.

Image hosted by Photobucket.com

இவ்விளைஞர், சமையல் கலை குறித்த படிப்பை முடித்து விட்டு, பெங்களூரில் உள்ள தாஜ் ஹோட்டலில், ஏப்ரல் 2002-இல், 18000 ரூபாய் சம்பளத்திற்கு பணியில் சேர்ந்தார். ஒரு சிறு விடுமுறையில் மதுரைக்கு வந்த அவரின் வாழ்க்கைப் பாதையை ஒரு சம்பவம் மாற்றியமைத்தது !!! தெருவில் அவர் பார்த்த ஒரு மனநிலை குன்றியவர், தாங்க முடியாத பசியில் தனது மலத்தையே எடுத்துண்ணும் கொடுமையைக் கண்டு அதிர்ந்து போய் அந்த மனிதருக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். பெங்களூர் திரும்பியும், அந்த நிகழ்வு அவர் மனதை விட்டு அகலவில்லை !

அத்தகைய நலிந்த ஜீவன்களுக்கு உணவு அளிப்பதே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக உணர்ந்த கிருஷ்ணன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை திரும்பி, தெருக்களில் அனாதையாக விடப்பட்ட மனநிலை குன்றிய நலிந்தவருக்கு தன்னால் இயன்றதை செய்து வந்தார். சில மாதங்களில் மகனின் உயர்ந்த உள்ளத்தை புரிந்து கொண்ட அவரது தந்தை, கொஞ்சம் பணவுதவி செய்தார்; தாய் உணவு சமைத்து வழங்கினார்.

Image hosted by Photobucket.com

ஆனால் அவை போதுமானதாக இல்லை. கிருஷ்ணன் சில உணவு விடுதிகளை அணுகி, மீந்து போகும் உணவை தந்துதவுமாறு வேண்டினார். தற்போது, கிருஷ்ணன் தனது வீட்டின் பின்புறத்தில், ஒருவரின் உதவியோடு, இந்த தெருவோர ஜீவன்களுக்காக, தினமும் தானே சமைக்கிறார். இவரின் தன்னலம் கருதா குணத்தை பாராட்டி ஒரு நல்லவர் தனது காரை தானமாக வழங்கி உதவினார். கிருஷ்ணன், இந்த காரில் உணவை எடுத்துச் சென்று, தினம் மூன்று வேளை வினியோகம் செய்கிறார்.

பண உதவி ஓரளவு கிட்டியும், தனியொருவராக சமாளிக்க இயலாததால் சில நல்ல உள்ளங்களுடன் இணைந்து AKSHAYA's helping in HELP என்ற டிரஸ்டை நிறுவினார். கடந்த 3 வருடங்களாக இச்சேவையை செய்து வரும் இவ்விளைஞர், " நான் ஒரு பணியில் சேர்வதென்பது இயலாத ஒன்று. அதனால், இம்மக்கள் மறுபடியும் பட்டினி கிடக்க நேரிடும். கிடைக்கும் உதவியை வைத்துக் கொண்டு இந்த சேவையை நான் வாழும் வரை செய்வதே என் லட்சியம்" என்று அமைதியாக எடுத்துரைக்கிறார் இந்த உன்னதமான இளைஞர் !!!

இந்த சேவை இவரது முழு நேரத்தையும் ஆக்ரமிக்கிறது. மேலும், இந்த நலிந்த ஜீவன்களுக்கு, முடி திருத்துவதையும், சுத்தப்படுத்துவதையும் கூட தானே செய்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக, ஓய்வு என்பதே இல்லாமல், நாள் தவறாமல், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இம்மக்களுக்கு உணவு அளித்து வரும் கிருஷ்ணன், இவர்கள் வாழ்வில் தோன்றிய விடிவெள்ளி என்பதில் சந்தேகமில்லை !

இத்தகைய அசாதாரணமான இளைஞர்களை பார்க்கும்போது, வருங்கால இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, May 21, 2005

தேசிகனுக்கு ஒரு கடிதம் !!!

Pl. see http://desikann.blogspot.com/2005/05/blog-post_19.html
and then READ what is written below !!!

Dear Mr. Desikan,

We are pleased to inform you that review of your performance for the period from 19th May 2004 to 18th May 2005 has been completed and your services with தமிழ் வலைப்பதிவுலகம் through தமிழ்மணம், are confirmed herewith as SENIOR LEAD பதிவர்.

It has been extraordinary on your part that you could complete one year in this chaotic organization so full of politics, in-fighting, groupism but you will surely agree that the quality of deliverables (including yours) from OUR organization have mostly been excellent.

You have been confirmed because you weathered the storm successfully. There is no need to remind you how much our organization has grown in the last one year and how many bright and motivated persons have joined us.

Please accept our heartiest congratulations on your confirmation. We hope that your enthusiasm and zeal increase in the coming years despite the fact that your compensation package remains the same !!!

Wishing you all the very best.

Yours sincerely,

For தமிழ் வலைப்பதிவுலகம் through தமிழ்மணம்
(on behalf of காசி & மதி)

என்றென்றும் அன்புடன் பாலா
(Honorary ஒருங்கிணைப்பாளர்)


(யாரும் நமக்கு எந்த போஸ்ட்டும் கொடுக்காததனாலே, நாமே ஒரு போஸ்ட்டை உருவாக்கிக்கணும் இல்லயா :))
நாமளே 1 வருடம் complete பண்ணல. சீனியருக்கெல்லாம்
confirmation லெட்டர் நாம தரது கொஞ்சம் ஜாஸ்தி தான் ! என்ன பண்றது ?

Saturday, May 14, 2005

சூப்பர்ஸ்டார் --- சம்பளத்திலும் NO.1

சந்திரமுகி வெளிவருவதற்கு முன் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி தான் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். சந்திரமுகியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நிலைமை மாறி விட்டது ! "தலைவர்" சந்திரமுகி படத்திற்காக பெறப் போகும் 15 கோடி ரூபாய் அவரை முதலிடத்தில் கொண்டு சேர்த்து விட்டது !!!

ரஜினி பல ஆண்டுகளாக தன் சொந்த தயாரிப்பில் தான் நடித்து வந்தார். இப்போது வெளியார் (சிவாஜி பிலிம்ஸ்) தயாரிப்பான சந்திரமுகியின் பட விற்பனையில் கிடைக்கும் தொகையில் 50% சூப்பர்ஸ்டாருக்கு அளிக்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !

சந்திரமுகி உலகளாவிய அரங்கிலும் (மலேஷியா, துபாய், அபுதாபி, அமெரிக்கா ...) சக்கை போடு போடுகிறது. பொதுவாக, வெளிநாட்டுத் திரையரங்குகள், முதல் வாரம் கடந்தும், நிரம்பி வழிவது அதிசயமான விஷயம். அந்த அதிசயத்தை சந்திரமுகி நடத்திக் காட்டியுள்ளது ! தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி வசூலாகும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இது தவிர்த்து, ஆந்திராவில் 7 கோடியும், கர்நாடகத்தில் 3 கோடியும் கொடுத்து விநியோகஸ்தர்கள் சந்திரமுகியை வாங்கியிருக்கிறார்கள்.

எனவே, யார் என்ன சொன்னாலும், "தலைவர்" வழி தனி வழி தான் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது ! கிரிக்கெட் வர்ணனையாளர்களிடமிருந்து அடிக்கடி வெளிப்படும், "FORM IS TEMPORARY, CLASS IS PERMANENT" என்ற கூற்று ரஜினிக்கு மிகவும் பொருந்தும் ! பாபா படத்தோல்வியைத் தொடர்ந்து எழுந்த "ரஜினி, சப்தமா, சகாப்தமா ?" (ரஜினி ராம்கி மன்னிக்கவும் :)) என்ற கேள்விக்கு சந்திரமுகி சரியான விடையளித்து விட்டதாகவேத் தோன்றுகிறது !

இப்பதிவை எழுதிக் கொண்டிருந்தபோது, ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில் ரஜினியின் 'ஆறிலிருந்து அறுபது வரை' படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும், அந்தக்கால ரஜினியின் மிகையில்லாத யதார்த்தமான நடிப்பும், கதையில் இழையோடும் சோகமும், மனதை பிசைந்து விட்டது ! அப்படத்தை, இத்தனை ஆண்டுகளில், ஒரு ஏழெட்டு தடவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், படம் முடிந்த பின்னரும் அதன் தாக்கம் சிறிது நேரம் நிலைத்து நிற்கும். ஒருவித சோகம் மனதை கவ்விக் கொண்டிருக்கும் !

அடுத்த 5 ஆண்டுகளுக்காவது, ரஜினிகாந்த் வருடத்திற்கு இரண்டு நல்ல படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். 'தலைவர்' புரிந்து கொண்டால் சரி !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, May 13, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 24 - விடைகள்

நண்பர்களே,
அடுத்து வரப்போகும் "பல்லவியும் சரணமும் - 25" வெள்ளி விழா பதிவு! இதற்காக 20 நல்ல பழைய பாடல்களை சேகரித்து வருகிறேன்! 25 வாரங்கள் (நடுவில் ஓரிரு வாரங்கள் விட்டுப் போயிருக்கலாம்!) இப்போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டி, நல்ல பாடல்களைத் தேடி எடுப்பதில் என் காவு தீர்ந்து விட்டது :))

அதனால், 25-வதுடன், பல்லவியும் சரணமும் விளையாட்டை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்திருக்கிறேன். இது வரை வந்த மொத்த 'பல்லவியும் சரணமும்' பதிவுகளில் கேட்கப்பட்ட சரணங்களில், உங்களால் விடை கூற முடியாதாவை என்று பார்த்தால், பத்து அல்லது பதினொன்று மட்டுமே தேறும் :))

உங்களது பேரார்வமும், பழைய பாடல்களின் மீதான விருப்பமும் தான், என்னை இப்போட்டியை தொடர்ந்து நடத்த வைத்தது. "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!1. சிறுக சிறுக உயிரை பருகிச் சென்றாளே ...

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்!

2. நித்தம் இதழ் தேடும் நேரம் நாணம் எனும் நோய் ...

செங்கமலம் சிரிக்குது, சங்கமத்தை நினைக்குது

3. உன் புகழ் வையமும் சொல்ல ...

என்ன விலை அழகே ? சொல்ல விலைக்கு வாங்க வருவேன்!

4. மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம்...

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

5. கலை நிலா மேனியிலே சுளைப்பலா சுவையை ...

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம், ஒரு அம்மானை

6. மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் ...

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

7. இன்பதுன்பம் எதிலும் கேள்வி தான் ...

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ?

8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு ...

கண்ணா வருவாயா, மீரா கேட்கிறாள், மாலை மலர்ச்சோலை

9. கொடி தான் தவழுது தவழுது பூப்போல் ...

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத் தானே!

10. யாரும் அறியா பொழுதினிலே அடைக்காலம் ஆனேன் ...

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், அருள்மொழி கூறும்

11. பித்து பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்கு...

குங்குமப்பூவே, குஞ்சு புறாவே, தங்கமே உன்னை கண்டதும் நெஞ்சம்

12. காலை மலருக்கு பகையாக ஆனேன்...

துயிலாத பெண்ணொன்று கண்டேன், நானா, ஆமாம், எந்நாளும் ....


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, May 07, 2005

இது தாண்டா புள்ள !

நான்கு தலைமுறைகளாக தினக்கூலிகளாக இருந்தவர்களின் வம்சாவழியில் வந்த 23 வய்து நிரம்பிய சகாயராஜ் இன்று Aztec Software Technology services என்ற நிறுவனத்தில் பணி புரிந்து, வருடத்திற்கு இரண்டரை லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற தகவல், அவர் தாயும் தந்தையும் சேர்ந்துழைத்து நாளொன்றுக்கு ரூ.100 சம்பாதிக்கின்றனர் என்பதுடன் ஒப்பிட்டு நோக்கும்போது பலரை மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்!

இந்த இளைஞரின் வெற்றிக்கதை வில்லுபுரத்தில் உள்ள பெரியநாயகி நகர் என்ற கிராமத்தில் தொடங்கியது! இவர் சிறுவயதில் பள்ளி (St.Michaels) செல்ல தினமும் 6 கி.மீ நடக்க வேண்டியிருந்தது. SSLC தேர்வில் பள்ளியில் முதலாவதாக வந்தது தான் இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. குடும்பச்சூழல் கருதி இவரது தந்தை இவரையும் வயற்காட்டு வேலைக்கு வருமாறு பணித்தபோது சகாயராஜ் திட்டவட்டமாக மறுத்து, தன் ஆசிரியரின் அறிவுரைப்படி, கணினிவியல் டிப்ளமா படிப்பில் சேர்ந்தார். அடுத்த 3 ஆண்டுகள் மிகுந்த கஷ்டங்களுடன் கழிந்தன. தன்னுடைய பாதிரியாரிடமிருந்து வாங்கிய கடன், சர்ச் வழங்கிய நன்கொடை மற்றும் அரசாங்க உதவித் தொகை ஆகியவற்றைக் கொண்டு படிப்பு இதர செலவுகளை சமாளித்து சிறப்பாகவே படித்தார். விடுமுறைகளில் தனது உறவினர்களோடு சேர்ந்து கட்டட வேலையும் செய்து பணம் ஈட்ட வேண்டியிருந்தது!

முதலில் ஏலகிரியில் ஒரு சிறிய கம்பெனியில் பணி செய்தவர் நௌக்ரி.காம் தளத்தில் பதிவு செய்து அதன் வாயிலாக AZTEC நிறுவனத்தால் (எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொண்டு) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டி, ஓய்வு நேரங்களில், Perl, Ruby, C++ ஆகிய கணினி மொழிகளை கற்றுக் கொண்டிருக்கிறார்! அவரது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, அடுத்த 3 வருடங்களில் MCA படிப்பை முடிப்பதும், தம்பிகளில் கல்விக்கு பணம் அனுப்புவதும், அவரது தந்தை அண்மையில் கட்டிய எளிய தகட்டுக்கூரை வேய்ந்த வீட்டிற்கு வாங்கிய கடனை அடைப்பதும் ஆகியவையே தனது தற்போதைய இலக்குகள் என்று ஆரவாரமில்லாமல் கூறும் இந்த இளைஞர் தலித் மாணவர்களுக்கு (ஏன், எல்லா மாணவர்களுக்குமே!) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் - பதிவு 24

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. சிறுக சிறுக உயிரை பருகிச் சென்றாளே ...
2. நித்தம் இதழ் தேடும் நேரம் நாணம் எனும் நோய் ...
3. உன் புகழ் வையமும் சொல்ல ...
4. மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம்...
5. கலை நிலா மேனியிலே சுளைப்பலா சுவையை ...
6. மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் ...
7. இன்பதுன்பம் எதிலும் கேள்வி தான் ...
8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை ...
9. கொடி தான் தவழுது தவழுது பூப்போல் ...
10. யாரும் அறியா பொழுதினிலே அடைக்காலம் ஆனேன் ...
11. பித்து பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்கு...
12. காலை மலருக்கு பகையாக ஆனேன்...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, May 02, 2005

Devastated rape victim says she would rather die than live !

இந்த செய்தியை படிக்கும்போதே மனது பதைக்கிறது. இந்த அக்கிரமத்தை செய்த கேடு கெட்ட ஜென்மங்களை, மிருகங்களோடு ஒப்பிடுவது, அவற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 17 வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டதாக கதறும் இந்த அபலைக் குழந்தைக்கு என்ன கூறி ஆறுதல் தர முடியும் ? தன்னை எரித்துக் கொள்ளப் போவதாகவும் அப்பெண் கூறியிருப்பது, இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் நிலவும் அவலத்தையும், அயோக்கியத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்த மகாபாதகத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை கூட சரியான தீர்ப்பாக முடியாது. பழிக்கு பழி சரியான வழி இல்லை என்றாலும் கூட, இவ்வரக்கர்களை சித்ரவதை செய்து (அவர்களே தங்களை கொன்று விடுமாறு கெஞ்சும் அளவுக்கு!) இறுதியாக மக்கள் முன்னிலையில் கொல்லுவது நிச்சயம் தவறில்லை என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails